tamilnadu

img

ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புகார் தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்

ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார் தெரிவிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் ‘புகார் மேலாண்மை அமைப்பு’ (சி.எம்.எஸ்.) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும். வங்கிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக மாற்றவும், அவர்களது குறைகளை தீர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த செயலி மூலம் புகார் தெரிவித்தவுடன் தானாகவே ஒப்புதல் தகவல் கிடைக்கும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட நிலைத்தகவலும் பின்னர் அதில் வெளியிடப்படும். மேலும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் அதில் வசதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;